Blog

புதுமை என்பது புதிரானது

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 25/06/2026
  • Category: valkkai
  • Views: 84
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

புதுமை என்பது புதிரானது புரியாதது, புரிந்து விட்டால் புதைக்காது புதையலாகும் அது. புதுமை என்பது புயலானது அது புரட்டிப் போடவும் தயங்காதது, பூதாகரமாக உருவெடுத்தால் புவியே தாங்க முடியாது. புதுமை என்பது பூத்தேவருவது, பூத்தே மணக்கத் தவறினால் புகட்டும் பற்பல பாடமது. புதுமைப் போதையது புகலிடம் தரும் பல தவறுகளையது. புதுமையில் மயங்கிக்கிடந்தால் புதைத்திடும் மனித வாழ்க்கையையேயது. புதுமையும், பேரழிவையும் பேரதிர்ச்சியையும் தருவது, புரிதலின்றி பயன்படுத்தினால் பூகம்பமாய் வெடிக்குமது. புதுமை என்பது விரட்டி வருவது, மிரட்டிப் பார்ப்பது, விரத்தியடைந்தால் விடிவுகாலம் பிறக்காது. புதுமை என்பது புதுமையானது, புரிந்து நடந்தால் புரட்சி தானது. புதுமை என்பது மாற்றத்தைத் தருவது, மாறவில்லை என்றால் ஏமாற்றத்தையேத் தரும் அது. புதுமையில் பழமை புகுந்தால் முதுமைதான் அது, புதுமையில் அரியபழமை அழிக்கப்பட்டால், புதுமையே புகைச்சலாகுமது. புதுமையில் அரியபழமை அழைக்கப்பட்டால் புதுமையே புகழாரமாகும் அது. புதுமையும் பழமை வியாதியாகாது, புதிய வியாதிதைத் தந்தால் பூமியைக் காக்க முடியாது. புதுமைப் புரட்சி புதிரான பூச்சியானால் புழுவாய் துடிக்க வைக்குமது. புதுமைக்கு பசுமையே பசியானால் இரையாக்கும் வாழும் பூமியைத்தான் அது. புதுமை என்பது புனிதம் இல்லாது புதினம் ஆனால் , எத்தனாய் இருந்து நம்மைப் பித்தனாக்குமது. புதுமைக்கு புகலிடம் தந்த புதுமனிதா, உன் புகலிடமே புதை குழியாகாது பார்த்துக் கொள்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media